Credentials
   
  Bio-Data
 
  English
   
  Testimonials
   
  Languages Known
   
  Membership
   
  Photo Gallery
   
  Video Gallery
   
   
   
 

   
   
 
முனைவர் மு. பொன்னவைக்கோவின் தன்விவரக்குறிப்பு
பிறப்பு

தமிழகத்தில் 'சான்றோர் உடைத்துத் தொண்டைநாடு' என்னும் சிறப்புடைய முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் (இப்போதைய விழுப்புரம் மாவட்டம்) வானூர் வட்டத்தில் உள்ள செங்கமேடு என்னும் சிற்றூரில் ஊர் போற்றும் உத்தமர்களாய், பலரும் பாராட்டும் வகையில் வாழ்ந்து வந்த பாரி வள்ளல் வழித்தோன்றல்களாகிய தெய்வத்திரு. சு.முருகேச உடையார் தெய்வத்திருவாட்டி மு.பொன்னிக்கண்ணு அம்மையாரின் இளையமகனாக 1946-ஆம் ஆண்டு பிறந்தவர்.

 
தொடக்கக்கல்வி

தனது கல்வியை 1950-ஆம் ஆண்டு திண்ணைப்பள்ளியில் தொடங்கி, முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை செங்கமேட்டு அரசுத் தொடக்கப்பள்ளியில் 1952 முதல் 1956- ஆம் ஆண்டுகளில் பயின்று, தென்னாற்காடு மாவட்டம் வழுதாவூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை 1957 முதல் 1963 –ஆம் ஆண்டுகளில் பயின்று பள்ளிகளில், எல்லா நிலைகளிலும் முதல் மாணவனாகத் தேறியவர்..

 
உயர் கல்வி
B.E.(Electrical)1969கிண்டி பொறியியற் கல்லூரி, சென்னை
M.Sc. (Engg.)1972கிண்டி பொறியியற் கல்லூரி, சென்னை
Ph.D.
(Power System Planning)
1983IIT, புதுதில்லி
 

கிண்டி பொறியியற் கல்லூரியில் பயின்றபோது, ‘தமிழ் மன்றச் செயலாளராகப் பணியாற்றி 4000 அறிவியல், பொறியியல் கலைச்சொற்கள் அடங்கிய கலைச்சொல்’ தொகுப்பினை 1969 இல் தமிழ்மன்ற வெளியீடாக வெளியிட்டுள்ளார். பல அறிவியல் கட்டுரைகளை கிண்டி பொறியியல் கல்லூரி ஆண்டு மலரிலும், கலைக்கதிர், தென்மொழி இதழ்களிலும் 1967 முதல் 1974 வரை வெளியிட்டுள்ளார்.

 
பணிக்குறிப்பு
வ.எண் வகித்த பதவி பணியிடங்கள் ஆண்டுகள்
1.முதன்மைக் ௧ல்வி அதிகாரிவிநாயகா கல்விக்குழும ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலைப் பல்கலைக் கழகம் 2017 முதல்...
2.இணைவேந்தர்பாரத் பல்கலைக்கழகம் ஏப்ரல் 2017 - செப்டம்பர் 2017
3.துணைவேந்தர்பாரத் பல்கலைக்கழகம் 2014 - 2017
4.துணைவேந்தர்SRM பல்கலைக்கழகம் 2011 - 2014
5.முதன்மைக் ௧ல்வி அதிகாரிSRM பல்கலைக்கழகம் 2010 - 2011
6.துணைவேந்தர்பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2007 - 2010
7.இயக்குநர்
(ஆய்வு,இணையவழிக்கல்வி)
SRM பல்கலைக்கழகம் 2003 - 2007
8.இயக்குநர்
(துணைவேந்தர் திலை)
தமிழ் இணையப்பல்கலைக் கழகம், சென்னை 2000 - 2003
9.தலைமைப்பேராசிரியர்
(கணிப்பொறித்துறை)
மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, திருச்சி 1989 - 1993
மண்டலப் பொறியியல் கல்லூரி, திருச்சி 1993 - 1995
மூகாம்பிகை பொறியியல் கல்லூரி, திருச்சி 1989 - 1993
10.பேராசிரியர் (மின்னியல்)HIMEE. ஹூன், லிபியா 1986 - 1989
11.ஆட்சிக்குழுச்செயலர் & அறிவுரைஞர் (பொறியியல்)ECCO, திருபோலி, லிபியா 1984 - 1986
12. தனியதிகாரிகிராமிய மின்சார வாரியம், புதுதில்லி 1977 - 1984
13. உதவிப்பொறியாளர்தமிழ்நாடு மின்வாரியம்,
IISc.,(பெங்களுர்),
BHEL, புதுதில்லி
1972 -1977
14. புலப்பொறியாளர்தமிழ்நாடு மின்வாரியம்,
Crompton Engg. Co.
1969 – 1970
 
படைப்புகள்
  • 24 புத்தகங்கள்
  • 114 ஆய்வுத்தாட்கள்
  • 54 ஆய்வறிக்கைகள்
பிற படைப்புகள்
  1. ‘கணிமொழி சி’ - தமிழ் கணிப்பொறி மொழி
  2. ‘இணைய மொழி ஜாவா’ - தமிழ் கணிப்பொறி மொழி
  3. ‘இணையத் தளம் தேடு பொறி’, - தமிழ்த்தேடு பொறி
  4. தமிழ் விசைப்பலகை – TamilNet 99 Key Board
  5. தமிழ் அனைத்து எழுத்தரு தரப்பாடு - TACE-16
தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணிகள்

தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் இயக்குநராக 2000-ஆம் ஆண்டு சூலை மாதம் 5-ஆம் நாள் பொறுப் பேற்று, இணையத்தின் வழியாக உலகு தழுவி வாழும் தமிழ் மக்கட்கும் தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும் வேண்டிய வாய்ப்புகளை உருவமைத்து, மழலைக் கல்வி, தமிழ்ச் சான்றிதழ்க்கல்வி, தமிழ்ப் பட்டயக்கல்வி, தமிழ்ப் பட்டக் கல்வி ஆகியவற்றுக்கான பாடங்கள் இணையத்தில் பல்லூடாக வசதிகளுடன் சிறப்பாக வழங்கும் வாய்ப்பைப் பெற்றேன் . தமி.ழ் மின்நூலகம் ஒன்று அமைத்து அதில் சங்ககால இலக்கியங்களில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை மொழி ஞாயிறு பாவாணர் ஐயா அவர்களின் நூல்கள் உட்பட, தேடும் வசதிகளுடன் உரையுடனும் வழங்கி மகிழ்ந்தேன். மேலும் மின்நூலகத்தில் அகராதிகள், கலைச்சொற்கள், பண்பாட்டு நிகழ்வுகளின் ஒளிக்காட்சிகள், 120க்கும் மேற்பட்ட தென்னிந்திய கோயில்களின் ஒளிக்காட்சிகள் ஆகியவை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம் பெறச்செய்தேன். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வழங்கிய தமிழ்ப் பாடப்படிப்புகள், மின்நூலகம் ஆகியவற்றை உலகு தழுவி வாழும் தமிழர்கள் படித்து பயன் பெறுமாறு உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்பு மையங்களைத் தொடங்கினேன், இன்று உலகில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்த இந்த வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

 
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பணிகள்

இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு ஜுலை மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரானேன். பல ஆண்டுகளாக தமிழக மண்ணில் தமிழ்மொழிக் கல்வி தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றிற்கு பல்கலைக்கழகங்களும் பிற கல்விக் கூட்டங்களும் ஆர்வம் காட்டாமல் நிலவிய நிலை என்னை வெகுவாகத் தாக்கியிருந்தது. தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக, தனித்தமிழ் பேச்சுமொழியாக, கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக இல்லாமல், வழக்கில் தமிழ் தமிங்கில மொழியாக மாறிவரும் நிலை வேதனையைத் தந்தது. இந்நிலை மாற இளைய சமுதாயம் மாற வேண்டும். இளைய சமுதாயத்ததை கல்விக் கூடங்களால்தான் மாற்ற இயலும். கல்விக் கூடங்களையும் இளைய சமுதாயத்தையும் துணைவேந்தார்கள் நினைத்தால் மாற்ற முடியும் என்ற ஆழ்ந்த துணிபினைப் பெற்றேன். அதன் விளைவாக பல்கலைக்கழகத்தில் பல மாற்றங்களைக் கொணார்ந்தேன்.

பல்கலைக்கழக ஆட்சிமொழியைத் தமிழாக்கினேன். பேச்சு மொழியைத் தமிழாக்கினேன், கல்வி மொழியைத் தமிழாக்கினேன், வழிபாட்டு மொழியைத் தமிழாக்க அருட்சுனைஞர் பட்டயப்படிபைத் தொடங்கினேன். பல்கலைக் கழகத்துடன் இணைவுபெற்ற கல்லூரிகளும் தமிழ்வழி செயல்படும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள். பட்டப்படிப்பில் பயிலும் மாணவார்கள் எந்த நாட்டினராயினும் கட்டாயம் தமிழ் மொழியைப் பயிலவேண்டும் என பாடத்திட்டத்தை மாற்றி அமைத்தேன். அதே நிலையை தமிழகத்தில் உள்ள அத்தனைப் பல்கலைக்கழகங்களும் பின்பற்ற வேண்டிய நிலையை உருவாக்கினேன். பல்கலைக்;கழகம் வழங்கும் பாடத்திட்டங்கள் தமிழ் வழியும் ஆங்கில வழியும் நடைபெற வழி வகுத்தேன். எல்லா நிகழ்ச்சிகளும் தமிழ்வழி நடைபெறத் தொடங்கின. முனைவார் பட்ட ஆய்வுக் கட்டுரைகளை தமிழிலும் வழங்க வழிசெய்தேன். பல்கலைக்கழக இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வடிவமைக்கப் பட்டமைக்க வழிசெய்தேன்.

கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகங்களில் அறிவியல் பாடப்பிரிவில் மூன்றாண்டு இளநிலைப் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மூன்றாண்டு இளநிலைப் பட்டப்படிப்புகள் படித்துப் பட்டம் பெறுவோர் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் மேற்படிப்பிற்கோ அல்லது வேலைக்கோ செல்ல இயலாது. எனவே, நான்காண்டு B.S. பட்டப் படிப்புகள் அறிவியல் பாடப் பிரிவுகளில் தொடங்க பல்கலைக்கழகங்களுக்கு இசைவளிக்க வேண்டுமென UGC-f;F விண்ணப்பித்தேன். நான் வழங்கிய திட்டத்தின் அடிப்படையில் UGC புதிய பாடமுறையாகிய B.S. பட்டப் படிப்பை UGC-யின் பட்டப்படிப்புகள் வரிசையில் முதல் முறையாக சேர்த்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொடங்க இசைவு அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் நான்காண்டு B.S. பட்டப் படிப்புகளைத் தொடங்கினேன். மேலும் பல பதிய இளநிலை, முதுநிலை, பட்டய படிப்புகளைத் தொடங்கினேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்ப இதழ் தமிழ், ஆங்கிலம ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுடன் வெளியிட வழி செய்தேன். IEEE Spectrum என்னும் தொழில்நுட்ப இதழ் தமிழில் மொழிபெயார்க்கப்பட்டு “IEEE Spectrum தமிழில்” என்று வெளியிட்டேன். பாரதிதாசன் பல்கலைக்கழக செய்தி மடலில் செய்திகள் தமிழில் வெளியிட வழி செய்தேன். ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த பல்கலைக்கழக ஆண்டறிக்கையைத் தமிழிலும் வெளியிட்டேன். பாரதிதாசன் பல்கலைக்கழக பதிப்புத்துறையில் எனது மூன்று ஆண்டு பணிக்காலத்தில் 32 நூல்களை பல்கலைக்கழகப் பதிப்பாக வெளியிட வழி செய்தேன்.

பல்கலைக்கழகத்தில் ஆய்வை மேம்படுத்த, நேனோ அறிவியல் மற்றும் நேனோ தொழில்நுட்ப ஆய்வு மையம் (Centre for Nano Science and Nano Technology), உயர் அழுத்த ஆய்வு மையம் (High Pressure Research Centre), அறிவுரைப் பணித் திட்டங்களை மேற்கொள்ள GIS தொழில்நுட்ப மையம் (GIS Technology Centre), தமிழக அரசின் ரூபாய் ஒரு கோடி நிதியுதவியுடன் உயிரியத் தொழில்நுட்ப மையம், சித்தா-ஆயுர்வேதா மருந்துகள் ஆய்வு மேம்பாட்டு மையம் , போன்ற பல புதிய ஆய்வு மையங்களைத் தொடங்கினேன்.

பார்வை அற்றோர், காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், மூளை வளர்ச்சி குன்றியோர் ஆகியோருக்கு ஆற்றல் கல்வி வழங்க UGC -யின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவியுடன் அமைக்க ஏற்பாடு செய்தேன்.

மகாத்மா காந்தி-டோரன்கேம்ப் ஆய்வு மையம், உயிரியப் பள்ளிக் கல்வியில் உயிரின வதையின்றி கணிப்பொறி தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி ஆய்வு செய்ய சுவிட்சர்லாந்து (Switzerland ) நாட்டைச் சார்ந்த (DorenKamp-Zbinden Foundation என்ற நிறுவனத்தின் 4,50,000 ஈரோ (Eu) நிதியுதவியுடன் தொடங்க வழி செய்தேன்..

கலைஞர் வளர்தமிழ் ஆய்வு மையம் தொடங்குதல், நேரு உயராய்வு தொடங்குதல், கலைஞர் இலக்கிய களஞ்சிய வெளியீட்டுப் பணி, ஓலைச் சுவடிகளைத் தொகுத்து PDF வடிவில் இணையத்தில் இடல், அவற்றை இன்றைய தமிழ் வரிவடிவில் மாற்றி பகுப்பாய்வு செய்தல், அண்ணா இருக்கை ரூ.10 இலட்சம் நிதியுடன் தொடங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டேன்.

மாணவர்களின் நன்மைக்காக மாணவார் குறைதீர் மையம், ஒரே நேரத்தில் 300 மாணவர்கள் உணவருந்த ஏதுவாக உயர்தர சமையல் கூடங்களுடன் பெண்கள் விடுதிகளுக்கும் ஆண்கள் விடுதிகளுக்கும் தனித்தனியே உணவகங்கள் நிறுவினேன். பெண்கள் விடுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மதிற் சுவர் எழுப்பினேன். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பினேன். புதிய மாணவர் விடுதிகள் பல கட்டினேன். பல்கலைக்கழக வளாகத்தில் வெளியில் இருந்து வருகை தரும் மாணவர்கள், பார்வையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக இரண்டு இடங்களில் சிற்றுண்டிச் சாலைகளை நிறுவினேன். அரும்பகம் என்னும் கட்டிடத்தை விருந்தினர் விடுதியாக மாற்றி அதில் வருகைதரு பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சிறப்பு விருந்தினர்கள்; ஆகியோர் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தினேன்.

பல்கலைக்கழக வளாகத்தில் விளையாட்டு வசதிகளே இல்லாத நிலையில் 400 மீட்டர் ஓடு தடம், சிறப்பான விளையாட்டு மைதானம், Volley ball, Badminton, Throw ball, Basket ball போன்ற விளையாட்டுகள் விளையாட நான்கு விளையாட்டுத் தளங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை முதன் முறையாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைத்தளித்தேன்.

பல்கலைக்கழக வளாக மேம்பாட்டிற்காக, வளாகத்தில் குடியிருப்போருக்கான வணிக வளாகம், வருகைதரு பேராசிரியர் குடியிருப்பு, திருமணமான மாணவர் குடியிருப்பு, பல்கலைக்கழக வளாகத்தில் குடியிருப்போர் குழந்தைகளின் வசதிக்காக தொடக்கப்பள்ளி, ஐந்து படுக்கை வசதியுடன்கூடிய மருத்துவமனை போன்ற வசதிகளைக் கட்டி வழங்கத் திட்டங்களைத் தீட்டி பணிகளைத் தொடங்கினேன்.

மாணவச் சமுதாயத்திற்கு விழிப்புணா;வு எழுகின்ற வகையில் எனது பட்டமளிப்பு விழாப் பொழிவுகள் அமைந்தன. அப்பொழிவுகள் கவிதைகளாக மலார்ந்தன. தமிழ் காக்கும் தக்காரைப் போற்றும் வகையான் பல கவிதைகள் பிறந்தன. பள்ளி, கல்லூரி காலங்களில் எழுதிய கவிதைகள் எங்கோ கரைந்து போயின. அவ்வாறு இக்கவிதைகளும் காலத்தால் கரைந்துபோகாமல் இருக்க இதுவரை இயற்றிய கவிதைகளைத் தொகுத்து ‘ பொன்னவைக்கோ கவிதைகள்’ என்னும் நூலாக வெளியிட்டேன். இந்நூலில் இடம்பெறும் கவிதைகள் இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும் மருந்தாக அமையவல்லன. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் ஆற்றிய பணிகளையெல்லாம் தொகுத்து ‘ துணைவேந்தர் சொல்லும் செயலும்’ என்னும் நூலாக வெளியிட்டுள்ளேன்.

 
SRM பல்கலைக்கழகதில் ஆற்றிய பணிகள்

ஆய்வுப்பணி மலர வித்திட்டேன். துணைவேந்தராக SRM பல்கலைக்கழகம் உலகின் முன்னிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக வளர ஒல்லும் வகையான் பணியாற்றினேன். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், அதன் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். அதற்கு SRM பல்கலைக்கழகம் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு SRM பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராயம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினேன். நடுவணரசின் சாகித்திய அகாதமி இந்திய மொழிகளுக்கு எத்தகைய பணிகளைச் செய்கிறதோ அதே போன்று தமிழ்மொழிக்கு ஆக்கப் பணிகளைத் திட்டமிட்டுச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, தமிழ்ப்பேராயம்(Thamizh Academy) எனும் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தமிழ்ப்பேராயம் கீழ்க்காணும் பல்வேறு பணித்திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

தமிழின் மரபுச் செல்வங்களை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லுதல், புதிய தமிழ்ப் படைப்புகளையும், தமிழ்ப்பணி ஆற்றி சாதனைப்படைத்துள்ள தமிழ் அறிஞர்களையும் பாராட்டி, உருபா 22 இலட்சம் பெறுமான 11 விருதுகளை வழங்குதல், தமிழ் நூல்களைப் பிறமொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுதல், தமிழ் ஆராய்ச்சியைச் செழுமைப்படுத்துதல், அறிவியல் தமிழை வளர்த்தல், தமிழ்ச் சமயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டயம், சான்றிதழ் படிப்புகளை வழங்குதல், அயலகத்தமிழ் ஆசிரியப் பட்டயப் படிப்பு வழங்குதல், கருத்தரங்கு, பயிலரங்கு, ஆய்வரங்குகள் நடத்துதல், கணினித்தமிழ்ப் பயிற்சியளித்தல், தமிழ் மென்பொருள் உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளைத் தமிழ்ப்பேராயம் ஆற்றிவருகின்றது.

  • தமிழ்க்கல்வி
    • தொல்காப்பியப் பள்ளி
    • சங்க இலக்கியத் தனிநூற் புலமைப் பயிற்சி
    • இணையவழிக் கல்வி ; M.A.(தமிழ்), M.Phil.(தமிழ்) அயலகத் தமிழாசிரியர் பட்டயக்கல்வி
  • தமிழ்ச் சமயக்கல்வி;
    • அருட்சுனைஞர் பட்டயக் கல்வி
    • யோகமும் மனித மாண்பும் - பட்டயக் கல்வி
    • ஓதுவார் பட்டயக் கல்வி
  • கணினித்தமிழ்க் கல்வி
    • பயிலரங்கம்
    • சான்றிதழ்ப் பயிற்சி
    • தமிழ் மென்மங்கள்
  • நூற்பதிப்பு
    • தொல்காப்பியச் சிறுநூல்கள்
    • அரிய தமிழ்நூல்கள்
    • மொழிபெயர்ப்பு நூல்கள்
    • மின்-நூலகம்
  • தமிழ்ப்பேராய விருதுகள்
    1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது (உருபா 1.5 இலட்சம்)
    2. பாரதியார் கவிதை விருது (உருபா 1.5 இலட்சம்)
    3. அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது (உருபா 1.5 இலட்சம்)
    4. ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருது (உருபா 1.5 இலட்சம்)
    5. பெ.நா. அப்புசாமி அறிவியல்தமிழ் விருது (உருபா 1.5 இலட்சம்)
    6. ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது. (உருபா 1.5 இலட்சம்)
    7. முத்துத்தாண்டவர் தமிழிசை விருது (உருபா 1.5 இலட்சம்)
    8. வளர்தமிழ் விருது (உருபா 1.5 இலட்சம் )
    9. விபுலானந்தர் அயலகத்தமிழர் படைப்பிலக்கிய விருது (உருபா 1.5 இலட்சம்)
    10. பரிதிமாற்கலைஞர் வாழிநாள் சாதனையாளர் விருது (உருபா 2.0 இலட்சம்)
    11. பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (உருபா 5.0 இலட்சம்)
 
இதுவரை நடந்துள்ள பணிகள்
  1. தமிழ்க் கல்வியைப் பொருத்தவரையில் இணையவழி வழங்குவதற்கான M.A.(தமிழ்), M.Phil.(தமிழ்) ஆகிய மேற்படிப்புகள் தொடர்பான பாடங்கள் இணையத்தில் ஏற்றப்பட்டு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதன. பிற கல்விப் பணிகளாகிய தொல்காப்பியப் பள்ளி, சங்க இலக்கியத் தனிநூற் புலமைப் பயிற்சி, போன்ற படிப்புகளுக்கான பாடங்கள் எழுதப்பட்டு வருகின்றன. அயலகத் தமிழாசிரியர் பட்டயக் கல்விக்கான பாடங்கள் நூல்களாக அச்சிடப்பட்டு இணையத்திலும் ஏற்றப்பட்டுள்ளன. இப்பாடத்திட்டத்தில் தென்னாப்பிற்காவிலிருந்து 70 மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். ஆஸ்தரேலியாவிலிருந்தும், கனடாவிலிருந்தும், அமரிக்காவிலிருந்தும் இப்பாடத்திட்டத்தில் சேர்ந்து பயில விருப்பம் தெரிவித்துள்ளனர்.
  2. தமிழ்ச் சமயக்கல்வியைப் பொருத்தவரையில் அருட்சுனைஞர் பட்டயக் கல்வி மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. இப்படிப்பு ‘தெய்வத்தமிழ் அறக்கட்டளை’ என்ற அமைப்புடன் இணைந்து வழங்கபட்டு வருகின்றது. இப் பட்டயப் படிப்பில் முதலாமாண்டில் (2011) 78 மாணவர்களும், இரண்டாமாண்டில் (2012) 115 மாணவர்களும், மூன்றாம் ஆண்டு 60 மாணவர்களும் சேர்ந்து பயனடைந்துள்ளனர். யோகமும் மனித மாண்பும் பட்டயக் கல்வி கடந்த ஆண்டு (2013) தொடங்கப்பட்டு 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஓதுவார் பட்டயக் கல்வி இந்த ஆண்டு (2014) தொடங்கப்படவுள்ளது..
  3. கணினித் தமிழ்க் கல்வியைப் பொருத்தவரையில், தமிழ்ப் பேராயத்தின் கணினித்தமிழ்க் கல்வித்துறையும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன மொழித் தரவுத் தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து 20-1-2012 முதல் 30-1-2012 வரை 11 நாட்கள் தமிழ்க் கணினிமொழியியல் எனும் சிறப்புமிக்க பயிலரங்கினை நடத்தியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கருநாடகம், ஆந்திரம், தில்லி, இலங்கை, மலேசியா ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என 108 பங்கேற்பாளர்கள் பங்கேற்றுப் பயிற்சிபெற்றனர். இவர்கள் 60 கல்வி நிறுவனங்களைச் சார்ந்த தமிழ், ஆங்கிலம், மொழியியல், புள்ளியியல், கணினியியல், கணினிப் பொறியியல் எனப் பல்துறைப் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாவர்.
  4. கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்த உதவும் சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றும் தமிழ்ச்சொல் சுட்டி அகராதிகள், விசைப்பலகைகள், எழுத்துருக்கள், குறியீடு மாற்றி போன்ற பல்வேறு தமிழ் மொழியாய்வுக் கருவிகள் கொண்ட, பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் உருவாக்கிய தமிழ்ச் சொல்லாளர் தொகுப்பு மென்பொருளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இரண்டு ஆண்டுகளாக அந்த மென்பொருளை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வழி செய்யப்பட்டது.
  5. பதிப்புத்துறையால், மூதறிஞர் தமிழண்ணல் எழுதிய ‘தொல்காப்பியம் விளக்கும் திருமணப் பொருத்தம்’, முதுமுனைவர் இரா. இளங்குமரனார் எழுதிய ‘தொல்காப்பியம் காட்டும் குடும்பம்’ முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ‘தொல்காப்பியர் விளக்கும் மனித நேயம்’, முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியம் எழுதிய ‘தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்’ ஆகிய தொல்காப்பியச் சிறு நூல்களும், தமிழ்ப்பேரறிஞர் தனிநாயக அடிகளார் அவர்களின் ‘ஒன்றே உலகம் (பயண நூல்)’, முனைவர் சி. இலக்குவனார் எழுதிய ‘Tholkaappiyam in English with Critical Studies’ ஆகிய நூல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
  6. முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்கள் எழுதிய ‘தொல்காப்பியரின் மொழி ஆளுமை’, முனைவர் உல. பாலசுப்பிரமணியன் அவர்கள் எழுதிய ‘தொல்காப்பியம் உணர்த்தும் மானுட விழுமியங்கள்’ மு.பெ. சக்தியவேல் முருகனார் அவர்கள் எழுதிய ‘தொல்காப்பியத்தில் மெய்யியல்’, அறிஞர் த.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்களின் ‘மருத்துவ அறிவியல் தமிழ் - ஆங்கிலம் அகராதி’ ஆகிய நூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
  7. தமிழ்ப்பேராய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் பாரிவேந்தர் த.இரா.பச்சமுத்து அவர்களின் பிறந்த நாளாகிய ஆகஸ்டு மாதம் 24-ஆம் தேதி வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 படைப்பிலக்கிய விருதுகளும், இரண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளும், இரண்டு பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுகளும், வழங்கப்பட்டுள்ளன. முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் 2012-ஆம் ஆண்டும் மூதறிஞர் தமிழண்ணல் அவர்கள் 2013-ஆம் ஆண்டும் தலா உருபா 5.00 இலட்சம் பண முடிச்சுடன் பாரிவேந்தர் பைந்தமிழ் விருதினைப் பெற்று சிறப்படைந்தனர்.
 
புகழாரம்
  • 'பாரதி சேவைச்செம்மல்' விருது – பாரதியார் சங்கம், சென்னை, ஜூன், 2014
  • 'திருவள்ளுவர் விருது' (செந்தமிழ்ச்செல்வர்) – சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம் – எப்ரல், 2014
  • 'செந்தமிழ்க் காவலர்' விருது – திருவள்ளுவர் மன்றம், இராசபாளையம், தமிழ் நாடு – பிப்ரவரி, 2014
  • சாதனைத்தமிழர் விருது – பாரதி தமிழ்ச்சங்கம், கொல்கத்தா – 2012
  • The prestigious "Bharat Jyoti Award", Certificate of Excellence, awarded by the India International Friendship Society for his Meritorious Services, for the Outstanding Performances and Remarkable Role of Sir Dr.M.Ponnavaikko, Vice-Chancellor of SRM University by Shri Rajeev Shukla, Hon'ble Minister of State for Parliamentary Affairs in the presence of Dr.Bhishma Narain singh, former Governor of TamilNadu & Assam, during the Global Friendship Day celebration held on 11th January 2012 at Winsor Palace, Janpath, New Delhi.
  • "Knights of Sovereign order of Princes and Knights of Antarcticland" of the Sovereign Order of Knights of Antarcticland, was awarded to Dr.M.Ponnavaikko by His Highness Sir Giovanni Caporaso Gottlieb, elected 42nd Grandmaster of Sovereign Order of Knights of Antarcticland State, USA, in the Nobility Awarding ceremony held on the 7th November 2009. With this Honor he is entitled to use the title Sir affixed to his name, His Excellency Sir M.Ponnavaikko.
  • Certificate of Honour, awarded by The International Council of CCLP Worldwide, Brazil, in recognition of his valuable contributions to the field of higher education in India, on 6th November 2009.
  • Certificate of Appreciation awarded by IEEE Inc. USA to Dr.Murugesan Ponnavaikko, for his Notable Services and Contributions towards the Advancement IEEE and the Engineering Professions, as Chair, IEEE Madras Section, 2006-2007.
  • "Lifetime Achievement Award", presented by the International Association of Educators for World Peace, Hunstsville, Alabama, USA, affiliated to the United Nations, at New Delhi on the occasion of the South Asia Virtual Education Submit held on 13-14 March 2008.
  • "Achievement Award" presented by the Indian Science Monitor at the 5th Annual Achievement Award Function during the National Science Day Celebration on 28th February 2008.
  • "Distinguished Service to Tamil Award" presented by the California Tamil Academy, USA, in Recognition of his Untiring Efforts to Promote Tamil Education Worldwide in June 2003.
  • Madras Chapter IEEE / PES Outstanding Engineer Award 2000.
  • Jaya Distinguished Academician Award 2001.
  • Recipient of the Best Project Award for the development of "Walking Aid for Blind" from the Tamilnadu State Council for the Science and Technology, 1994.
  • Listed in the Directory of Prominent individuals in the fields of Science and Engineering in Marquis Who's Who in America, 1998.
  • My Biographical -note is included in the Famous India: Nation’s Who’s Who (October 2016)
  • My Biographical -note is Published in the Asian American Who’s Who (Vol. III ), 2017
  • South African Award of the year 2017 awarded to Sir Dr.M.Ponnavaikko in recognition of his valuable service rendered for the production and publication of 1st to 12th Standard Tamil Books for the South African Schools, during the launching function of the School Tamil books held at Durban on 4th November 2017
பிற நினைவுணர் ஏற்புகள்
  • Member Board of Studies in Computer Science, Bharathidasan University, 1991 to 1995
  • Director, Summer Sequential Programme for M.Phil. ( Comp. Sc.), Bharathidasan University, 1991 to 1995
  • Member Board of Studies in Computer Science, Madras University, 1995 to 2000.
  • Member, Academic Council, Madras University, 1995 to 2000.
  • Expert Member in the National Committee on "National Initiatives on Engineering Experimentation" constituted by AICTE, New Delhi, 2001.
  • Expert Member in the UGC Sub-Committee to propose measures to deal with fall-out on higher education as a result of a recent Constitutional (86th) Amendment, making education as fundamental right for children of 6-14 age group, 2002.
  • Special Invitee to the National Graduate Student Repository formulation Committee, constituted by the UGC, Sept. 2004 to Sept. 2005.
  • Special Invitee to the Committee, constituted by the UGC, for framing Norms and Methods for implementing the proposal on National Graduate Student Repository Scheme, July 2006 to October 2006.
  • Member, Academic Council, Anna University, for a 3 year period from 3rd January 2006 to 2nd January 2009.
  • Chairman, IEEE Madras Section, 2006, and 2007.
  • Chair, IEEE India Council, 2013 and 2014
  • Vice-Chairman, Committee on 16-bit Tamil All Character Encoding: TACE-16, constituted by the Government of Tamil Nadu, March 2007.
  • Chairman, Committee on Tamil in Mobile phones, constituted by the Government of Tamil Nadu, March 2007.
  • Member, First Class Administrative Reforms Committee, constituted by the Government of Tamil Nadu, March 2007.
  • Member, Subcommittee to Examine the encoding of Tamil and other scripts of India, constituted by the Unicode Consortium, USA, 2007.
  • Chairman, Expert Committee, Cell Phone Keyboard Standardization Committee, constituted by Tamil Nadu Government, 2014.
  • தலைவர், தமிழ் வளர்ச்சிக்கழகம், சென்னை 600 005, 2017 முதல்
  • துணைத் தலைவர், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், மே 2015 முதல்
  • உறுப்பினர், தமிழகப்புலவர் குழு, 2014 முதல்
 
தொழில்நுட்ப அமைப்புகளிலன் உறுப்பாண்மை
(Affiliation to Technical and Other Societies)
  • Fellow IET, FIET(UK)
  • Senior Member IEEE (USA)
  • Life Member, Indian Society for Technical Education
  • Life Member, Indian Officers' Association
 
வல்லாண்மைத்துறைகள்  (Specialization Areas)
  • Power system Planning with special reference to Optimal Distribution System Planning
  • Virtual Education
  • Software Engineering.
  • Computer Simulation and Modeling.
  • Operation Research Techniques
  • Genetic Algorithm.
  • Neural Network
  • Fuzzy Logic.
  • Computer curriculum Development.
ஆய்வுப்பணிகள்  (Research Works)
  • Ph.D. Research Works :
    1. Ph.D. Programmes (Completed) : 11( 1999 - 2014 )
    2. Ph.D. Programmes (On going) : 6 (from 2010 till date)
  • M.Phil. (CS) Dissertations guided : 16 (1992-1999)
  • M.E.(CSE)/M.Tech.(CSE)/M.E. (Power Systems) Dissertations guided : 7 (1991 - 1995)
  • B.E. (CSE) Projects guided : 40 (1989 - 2000)
அறிந்த மொழிகள்

பேச, படிக்க, எழுதத் தெரிந்த மொழிகள் :
1. தமிழ், 2. ஆங்கிலம், 3. இந்தி, 4. பிரஞ்சு, 5. அரபிக், 6. ஜெர்மன்.

பேச, புரிந்துகொள்ள மட்டும் தெரிந்த மொழிகள்:
1. மலையாளம், 2. கன்னடம், 3 தெலுங்கு

 
பணிபுரிந்த / பார்த்த நாடுகள் - 21
1. அமெரிக்கா 1981
2. கனடா 1981
3. இங்கிலாந்து(லண்டன்) 1981-87
4. சுசர்லாந்து 1987
5. இத்தாலி 1987
6. மால்டா1987
7. லிபியா1984-89
8. நேபாளம்1982
9. சிங்கப்பூர்2000
10. இலங்கை 2000, 2001, 2002
11. மலேசியா 2001, 2007. 2013, 2014
12. சப்பான் 2000, 2007
13. தென்ஆப்பிரிக்கா 2002, 2014
14. மரூசியசு 2002
15. ஆஸ்திரேலியா 2013
16. சீனா 2004, 2006
17. இஜெர்மனி 2005
18. கானா 2004, 2006. 2012
19. நெதர்லாந்து 2005
20. தாய்லாந்து 2007, 2013
21. தாய்வான் 2012
மு. பொன்னவைக்கோ
 
 
 
 
 
 

© 2009. All rights Reserved. www.ponnavaikko.com
Best viewed in I.E. 4.0 and above in 1024 x 768