நாடா வளந்தரு நாடமைப்போம்

   
   

மனத்துக்கண் மாசின்றி வாழ்த லொன்றே

மனிதகுலக் கொள்கையென மலர வேண்டும்

பசியின்றி மக்களெலாம் வாழ்வ தற்கு

பகுத்துண்டு வாழும்நிலை எய்த வேண்டும்

பகையுள்ளம் மக்களைவிட் டகல வேண்டும்

பல்குழுவாய் இல்லாமல் பாரில் மக்கள்

கொல்குறும்பை வேரறுத்து குழுவொன் றாகி

நல்லுலகைப் படைக்கவழி நாட வேண்டும்

வள்ளுவனின் வழிநின்று வாழ வேண்டும்

வாடாத  நாடமைய  வருத்தி நம்மை

நாடா வளந்தரு நாடா யிந்த

நாட்டை வளர்ப்பதற்கு நாடு வோமே!

 

   
.. ..
  ஆகஸ்டு 15-ஆம் நாள் 2007ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக சுதந்திர தினக் கொடியேற்று விழாவில் வழங்கிய கவிதை