உயிரெழுத்தறிவாய்

   
   

அ ஆ என்றே அம்மா

ஆசை முத்தம் தருவார்

இ ஈ என்றே தங்கை

ஈயைக் காட்டிச் சிரிப்பாள்

உ ஊ என்றே அப்பா

ஊக்கம் தந்து மகிழ்வார்

எ ஏ என்றே தாத்தா

ஏட்டைக் கேட்டுப் படிப்பார்

ஐ என்பாள் பாட்டி

ஒழுங்காய்ப் பாடம் கேட்டு

ஓட்டம் பிடிப்பாள் பேத்தி

ஔவை சொல்லைக் கேட்டு

அஃகல் இன்றி வாழ்வோம்