பெற்றோர் வழிபாடு

   
   

என்னை ஈன்றிந்த மண்ணில்

கண்ணைப் போலென்னைக் காத்து

முன்னே அவையத்து நிற்க

முறையுடன் யான்கல்வி கற்க

தன்னைத் தணலாய் வருத்தி

தடம்சமைத் தளித்திட்ட என்றன்

பெற்றரும் பெற்றோர் களாய

வற்றாப் புகழுடை எந்தை

வழுவிலா முருகே சுடையார்

பொன்னரும் என்னுயிர் அன்னை

போற்றரும் பொன்னிக் கண்ணம்மை

பொற்பா தங்களைப் போற்றி

உற்றயென் உடன்பிறந் தோரைப்

பற்றுடன் தாள்பணிந் திங்கே

படைக்குவன் யானிந்த நூலை.